ETV Bharat / state

மத்திய அரசுடன் இணக்கம் ஏன்? - முதலமைச்சர் விளக்கம் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

விழுப்புரம்: பாஜகவின் அடிமையாக அதிமுக உள்ளது என்ற திமுகவின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Mar 21, 2021, 10:25 PM IST

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் கலிவரதனுக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் வாக்கு சேகரிக்கும்போது பேசிய அவர், "திமுக தலைவர் வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தவறான தகவலை பரப்பி வருகிறார். அதிமுக - பாஜகவின் அடிமை என்று கூறுகிறார். மத்திய அரசுடன் இணக்கமாக சென்றால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.

மத்திய அரசுடன் சண்டையிட்டு கொண்டிருந்தால் மாநில அரசுக்குத் தேவையான நிதி கிடைக்காது. இதே ஸ்டாலின், 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்திருந்தாரா? இல்லையா? அப்போது எல்லாம் பாஜக நல்ல கட்சி. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்தார்கள் என்பதற்காக 5 ஆண்டு காலம் கூட்டணியில் இருந்தீர்கள்.

ஆட்சி அதிகாரத்தை அனுபவித்த கட்சி, திமுக. பாஜக கூட அதிமுக கூட்டணி வைத்தால் தவறு. ஆனால், திமுக கூட்டணி வைத்தால் சரியாம். வேண்டுமென்றே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததை ஸ்டாலின் அவதூறாகப் பேசிவருகிரார்.

பச்சோந்தி தான் அடிக்கடி நிறம் மாறும். அதேபோன்றுதான் திமுகவும் அடிக்கடி தங்களது கூட்டணியை மாற்றி வருகிறது. திமுகவிற்கு எனக் கொள்கை ஏதும் இல்லை. மத்தியில் இருந்தாலும் சரி, மாநிலத்தில் இருந்தாலும் சரி, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்தில் வரவேண்டும் என்பதே அவரது கொள்கை.

திருக்கோவிலூரில் உரிய நீதிமன்றத்தை அமைத்துக் கொடுத்தது அதிமுக அரசு. மீண்டும் ஆட்சி அமைக்கப்பட்டால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.