திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸின் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில், தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் காணாமல் போன "தமிழைத் தேடி" என்ற விழிப்புணர்வு பயணம் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2ம் நாளான நேற்று (பிப்.22) விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பரப்புரை நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "தற்போது எந்த இடத்திலும் தமிழ் இல்லை. குழந்தைகளுக்கு கூட பெயர்கள் தமிழில் சூட்டப்படுவதில்லை. தமிழில் வாழ்த்து தெரிவித்தாலும் ஆங்கிலத்தில் தான் நன்றி தெரிவிக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் தமிழைத் தாய் மொழியாக கொண்டவர்கள் கட்டாயம் தமிழைப் படிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில், கட்டாயத் தமிழ் கற்றல் சட்டம் நிறைவேற்றப்பட்டும், இந்த சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. 10-ம் வகுப்பு வரை தமிழை கட்டாயப் பாடமாக்குவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.
தாய்மொழி எனக் கூறிவிட்டு, வீடுகளில் நாம் தமிழில் பேசுவதில்லை. பிற மொழிகளில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். பெயர்ப் பலகைகள் பிற மொழிகளில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கண்டால் கருப்பு மை பூச வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக மீண்டும் போராட்டம் நடத்துவோம்' - வைகோ!