விழுப்புரம்: தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய உப்பு உற்பத்தி செய்யும் பகுதியாக மரக்காணம் உள்ளது. இங்கு தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசுக்குச்சொந்தமான 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி பணி நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் உப்பு தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால், உற்பத்தி செய்யப்பட்ட 30 ஆயிரம் டன் உப்புகள் மலைபோல் குவிக்கப்பட்டு, தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. இதனால் உப்பு உற்பத்தியும் தற்காலிகமாக முடங்கியுள்ளது. இத்தொழிலில் 3,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தங்களுக்கான மாற்று ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்துதருமா என இப்பகுதி தொழிலாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: சமூக அக்கறைக்கு வயதுபொருட்டு இல்லை: ஆக்கிரமிப்புகளை அறவழியில் அடித்து நொறுக்கிய சிறுமி செம்மொழி