விழுப்புரம்: மரக்காணம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 164 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கு பள்ளியில் மதிய உணவு அளிக்கப்பட்டது. அப்போது உணவு சாப்பிட்ட மாணவர் ஒருவர் தான் சாப்பிட்ட உணவில் பல்லி இருப்பதாக தகவல் தெரிவித்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உணவு சாப்பிட்ட 25 மாணவர்களை உடனடியாக மீட்டு மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மாணவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களின் உடலில் ஒவ்வாமை இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்குமாறு பரிந்துரை செய்தனர். இதனால் மருத்துவமனையில் மாணவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
164 மாணவர்கள் பயிலக்கூடிய பள்ளியில் முதற்கட்டமாக 25 மாணவர்களுக்கு சத்துணவு வழங்கிய நிலையில் ஒரு மாணவனின் உணவில் பல்லி இருப்பது தெரியவந்ததை அடுத்து மற்ற மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படாமல் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் வழக்கு...காணாமல் போன ஆவணங்களின் நகல்கள் விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு