விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தாண்டவசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீ வெட்காளியம்மன் ஆலயத்தில் பௌர்ணமி நாளான நேற்று அம்மனுக்குப் பால் திருமுழுக்கு, சிறப்பு பூஜைகளுடன் வளைகாப்பு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பழங்கள், பலகாரங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவைகளுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மனை வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சியில், மரப்பலகைக்கொண்டு மூடப்பட்ட ஐந்தடி குழிக்குள் சாமியார் அமர்ந்து ஐந்து மணிநேரம் தியானம் செய்த பின்னர் குழியிலிருந்து மேலே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும் பக்தர்களுக்கு சாமியார் அருள்வாக்கு கூறினார். அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... எனக் கோஷமிட்டு பரவசமடைந்தனர்.
இதையும் படிங்க: தீப்பாய்ந்தாள் அம்மன் ஆலயத்தில் தீ மிதித் திருவிழா