விழுப்புரம்: விழுப்புரத்தில் அமைந்துள்ள 90 அடி உயரம் கொண்ட பிரமாண்ட ஶ்ரீஜெய ஜெய விஷ்வ ரூப ஆஞ்சநேயருக்கு, தமிழ்ப்புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, தமிழ்ப்புத்தாண்டையொட்டி இன்று டேங்கர் லாரியில் கொண்டு வரப்பட்ட ஐந்தாயிரம் லிட்டர் பால், கன உந்து விசை மோட்டார் உதவியுடன், குழாய்கள் முலம் மேல் ஏற்றப்பட்டு, 90 அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிலை மீது ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள், ஜெய் ஜெய் ஹனுமான் என வானதிர முழக்கமிட்டு, வழிபாடு நடத்தினர்.
இதையும் படிங்க: குருப்பெயர்ச்சி : திருநெடுங்களநாதர் கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்