தமிழ்நாட்டில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து சென்னை, மதுரை, தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 18 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு வெப்பமானி மூலம் உடல் பரிசோதனை செய்யப்பட்டு சிறப்பு பேருந்து வசதியின் மூலம் அவர்களது பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் குமார் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.