கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செய்தியாளர்களைத் தவிர்த்து மற்ற போலி நிருபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஊடகத்துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரனை சந்தித்து போலி நிருபர்களை கைதுசெய்ய வேண்டும் என்றும் கள்ளக்குறிச்சி பகுதியில் அதிகளவில் இருசக்கர ஊர்திகளில் ’PRESS’ ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு தவறான வழிக்கு ஒருசிலர் பயன்படுத்துவதாகவும் மனு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பளர் அரசு அங்கீகாரம் பெற்ற நாளிதழ், ஊடகங்களில் பணிபுரிபவர்கள் மட்டுமே தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டவேண்டும் என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ‘13 குளங்களில் 24 ஆக்கிரமிப்புகள்’ - உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!