ETV Bharat / state

புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த மதுபாட்டில்கள்  பறிமுதல்

விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை மதுவிலக்கு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

விழுப்புரம்
author img

By

Published : Aug 13, 2019, 7:17 PM IST

விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு, பாலமுருகன் ஆகிய இருவரும், கம்பன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த நான்கு சக்கர வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தபோது சட்டவிரோதமாக புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபானங்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கண்டதில், திண்டிவனத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார், சுரேஷ் என்பதும், ரூ.1லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவற்றை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

Intro:விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ 1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Body:விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு மற்றும் பாலமுருகன் ஆகியோர் நேற்றிரவு கம்பன் நகர் பேருந்து நிலையம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியில் சந்தேகத்திற்கிடமாக அதிவேகமாக வந்த TN-21-AV-9821 பதிவு எண் கொண்ட TATA ACE நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த வாகனத்தில் அந்நிய (பாண்டிச்சேரி) மாநில மதுபான பாட்டில்கள் 40 பெட்டிகளில் 1,920 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Conclusion:இதையடுத்து எவ்வித அனுமதியோ அல்லது உரிமமோயின்றி அன்னிய மாநில மதுபாட்டில்கள் கடத்திய திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கைபற்றப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ. 1 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.