விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு, அப்போதைய சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ஆண்டு தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
புகாருக்கு உள்ளான சிறப்பு டிஜிபி, அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்பி ஆகிய இருவரையும் அரசு பணியிடை நீக்கம் செய்தது. இருவர் மீதும் 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக விசாரணை நடந்து வருகிறது.
இந்தநிலையில், இன்று (ஜூன்10) விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. புகார்தாரரான பெண் ஐபிஎஸ் அலுவலர், முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
அப்போது, முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர் பெண் ஐபிஎஸ் அலுவலரிடம் 12ஆவது முறையாக குறுக்கு விசாரணை நடத்தினார். பல்வேறு கேள்விகளை எழுப்பி குறுக்கு விசாரணை செய்தார்.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம்;ஓய்வு நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைப்பு