விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2ஆம் தேதி வரை டெல்லி சென்று திரும்பியவர்கள், அவர்களது உறவினர்கள் என மொத்தம் 53 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து, கோயம்பேடு காய்கறிச் சந்தையிலிருந்து சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களால் ஒரே வாரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 300ஐத் தாண்டியது. அதையடுத்து செவ்வாய்க்கிழமை (மே 19) நிலவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 311ஆக உயர்ந்தது.
இந்த நிலையில், நேற்று (மே 20) மகாராஷ்டிராவிலிருந்து விழுப்புரம் திரும்பிய 6 பேர் உள்பட 7 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்படி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 318ஆக உயர்ந்துள்ளது. அதையடுத்து 20 பேர் வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோயம்பேடு சந்தையிலிருந்து திரும்பியவர்களில் 73 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மும்பையிலிருந்து கோவில்பட்டி வந்த 8 பேருக்கு கரோனா தொற்று