ETV Bharat / state

'பாஜகவுக்கு அதிமுக அடிமை சேவகம் செய்கிறது' - ஜவாஹிருல்லா விமர்சனம் - Serves the AIADMK slave for BJP

விழுப்புரம்: பாஜகவுக்கு அடிமை சேவகம் செய்வதையே அதிமுக அரசு முக்கியப் பணியாக கருதுவதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்தார்.

ஜவாஹிருல்லா விமர்சனம்
ஜவாஹிருல்லா விமர்சனம்
author img

By

Published : Feb 21, 2020, 11:48 AM IST

"குடியுரிமை காப்போம், குடியரசைக் காப்போம்" என்ற தலைப்பில் தமுமுக சார்பில் விழுப்புரத்தில் நேற்று (பிப். 20) கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, தேசிய மக்கள் தொகை பதிவேட்டுப் பணியை தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்க வேண்டும் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை அதிமுக அரசு நிராகரித்துவிட்டு, பாஜகவுக்கு அடிமை சேவகம் செய்வதையே முக்கியப் பணியாக கருதுவதாக விமர்சித்தார்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டுப் பணியை நிறுத்தி வைப்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடியதாக அமையும் என்ற அவர், இந்தப் பணிகள் தொடர்ந்தால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்துவது குறித்து கூட்டமைப்பின் தலைவர்கள் கூடி முடிவெடுக்க இருப்பதாகவும், இந்த திட்டத்தால் முதலமைச்சர் பழனிசாமியும் பாதிக்கப்படுவார் என்றும் கூறினார்.

ஜவாஹிருல்லா விமர்சனம்

தொடர்ந்து பேசிய ஜவாஹிருல்லா, காவிரி வேளாண் பாதுகாப்பு மண்டலம் தொடர்பான மசோதாவில் எண்ணெய் நிறுவனங்களை தடை செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களுக்குத் தடை விதிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி கூறியது கண்துடைப்பு என்று குற்றஞ்சாட்டினார்.

ஜவாஹிருல்லா விமர்சனம்

இதையும் படிங்க: திருமணத்துக்குப் பிறகு கம்பேக் தரும் ஜெனிஃபர் லாரன்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.