ETV Bharat / state

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி மாணவன் பலி - பள்ளி மாணவன்

விழுப்புரம்: திருவெண்ணைநல்லூர் அருகே பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி, மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

File pic
author img

By

Published : Jun 2, 2019, 8:44 AM IST

Updated : Jun 2, 2019, 9:24 AM IST

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவேல். இவரது ஆறு வயது மகன் முகுந்தன். அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவந்தார்.

இந்நிலையில் கோடை விடுமுறைக்குப் பின் நேற்று (ஜூன் 1) பள்ளிக்குச் சென்றுள்ளார். மாலையில் வகுப்பு முடிந்து பள்ளி வாகனத்தில் வீடு திரும்பினார். வாகனம் வீட்டின் அருகே வந்ததும் முகுந்தன் கீழே இறங்கி உள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக படியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

இதனை அறியாத வேன் ஓட்டுநர் வாகனத்தை இயக்க, முகுந்தன் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல் துறையினர், மாணவனின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவேல். இவரது ஆறு வயது மகன் முகுந்தன். அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவந்தார்.

இந்நிலையில் கோடை விடுமுறைக்குப் பின் நேற்று (ஜூன் 1) பள்ளிக்குச் சென்றுள்ளார். மாலையில் வகுப்பு முடிந்து பள்ளி வாகனத்தில் வீடு திரும்பினார். வாகனம் வீட்டின் அருகே வந்ததும் முகுந்தன் கீழே இறங்கி உள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக படியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

இதனை அறியாத வேன் ஓட்டுநர் வாகனத்தை இயக்க, முகுந்தன் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல் துறையினர், மாணவனின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம்: திருவெண்ணைநல்லூர் அருகே பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி, மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவேல். இவரது 6 வயது மகன் முகுந்தன். அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கோடை விடுமுறைக்குப் பின் நேற்று (சனிக்கிழமை) பள்ளிக்கு சென்றுள்ளார். மாலையில் வகுப்பு முடிந்து பள்ளி வாகனத்தில் வீடு திரும்பினார். வாகனம் வீட்டின் அருகே வந்ததும் முகுந்தன் கீழே இறங்கி உள்ளார். 

அப்போது எதிர்பாராதவிதமாக படியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனை அறியாத வேன் ஓட்டுநர் வாகனத்தை இயக்க, முகுந்தன்  சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாணவனின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்பட்டுள்ளது.

Last Updated : Jun 2, 2019, 9:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.