ETV Bharat / state

'உப்பளத் தொழிலாளர்கள் பிரச்னையில் அரசு தலையீட வேண்டும்' - வேல்முருகன் - labhours

விழுப்புரம்: "உப்பளத் தொழிலாளர்கள் பிர்சனையில் தமிழ்நாடு அரசு தலையீட்டு தீர்வு காண வேண்டும்" என்று, தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சி
author img

By

Published : May 19, 2019, 2:30 PM IST

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் காந்தாடு பகுதியில் ‘டீம் பத்மா கெமிக்கல்ஸ்' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இவ்வற்றில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 900 தொழிலாளர்கள் தினந்தோறும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு நிர்ணயித்த கூலியான ரூ. 385யை கொடுக்காமல் ஆண்களுக்கு ரூ. 320, பெண்களுக்கு ரூ.170 என்று கொடுக்கப்படுகிறது.

பல வருடங்களாக தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் நிறுவனத்தை கண்டித்து உப்பளத் தொழிலாளர்கள் சங்கம் போராட்டம் நடத்தியும் நிறுவன உரிமையார்கள் காதில் வாங்காமல் அலைக்கழித்து வருகின்றனர். மேலும் தட்டிக் கேட்கும் ஊழியர்களை தாக்கியும் வருகின்றனர். இதை தமிழக வாழ்வுரிமை கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உப்பளத் தொழிலாளர்களின் பிரச்னையில் தமிழ்நாடு அரசு தலையீட்டு தீர்வு காண வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேடு பகுதியில் 427.39ஏக்கரில் ‘KM 7575’ என்ற உப்பளம்; விழுப்புரம் மாவட்டம் காந்தாடு பகுதியில் 1223.23ஏக்கரில் ‘VM 187’ என்ற உப்பளம்; இவற்றை காஞ்சிபுரம் மாவட்டம் வில்லிப்பாக்கம் கிராமத்திலிருந்து செயல்படும்‘TEAM பத்மா கெமிக்கல்ஸ்’நிறுவனம், தனது உப்பு உற்பத்திப் பிரிவான‘கெம்ப்பாஃப் அல்கலிஸ் லிமிட்டெட்’ மூலம் நடத்தி வருகிறது. தாய் கம்பெனி,அதன் கிளைப் பிரிவு என நோக்குமிடத்து இது ஒரு கார்ப்பொரேட் நிறுவனம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் 27 ஆண்டுகளாக அது செய்துவரும் அடாவடிக்கும் அட்டூழியங்களுக்கும் அளவே இல்லை.

இந்த உப்பளங்களில் சுமார் 900தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். 27ஆண்டுகளாகியும் அவர்கள் யாருமே பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அவர்களுக்கு ESI, PFகிடையாது. போனஸ்,ஊக்கத்தொகை கிடையாது. தொழிலில் ஈடுபடும்போது அணிந்துகொள்ள வேண்டிய கையுறை, கண்ணாடி போன்றவையும் கிடையாது. விபத்து ஏதும் ஏற்பட்டால் முதலுதவி கூட செய்துகொள்ள வசதியில்லை. குடிநீர், கழிப்பிட வசதி கூட இல்லை. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அங்கங்கு இருக்கும் உப்பளங்களுக்குச் சென்று வர வாகன வசதி கூட இல்லை.

இவை மட்டுமா? மாத ஊதியமோ தொகுப்பூதியமோ என்று கூட இல்லை, நாள் கூலிதான்; அதுவும் பலமுறை போராடி அரசின் தொழிலாளர் நல ஆணையம் நிர்ணயித்த கூலி; 385 ரூபாய்! ஆனால் இந்தக் கூலியையும் முழுசாக வழங்கவில்லை; ஆண்களுக்கு320 ரூபாயும் பெண்களுக்கு 170ரூபாயும்தான் வழங்கப்படுகிறது.

இப்படி ஒரு ஒட்டச் சுரண்டல்,இந்த டிஜிட்டல் யுகத்தில்! அடுக்குமா? கணக்கு வழக்கில்லாத கார்ப்பொரேட் கொள்ளை என்பது இதுதான்! குரோனி கேப்பிட்டசலிசம் என்பதும் இதுதான்!

தொழிலாளி என்பவன் மனிதன் அல்லாமல் யார்?மனித தேவைகளை அறவே விட்டுவிட்டு வெறும் வயிற்றுத் தேவைக்கு மட்டுமே போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறான் ‘TEAMபத்மா கெமிக்கல்ஸ்’ நிறுவன உப்பளத் தொழிலாளி! இந்த நாள் கூலியை உயர்த்த வேண்டி 2017ஆம் ஆண்டு முதல் இன்று வரை பல போராட்டங்கள்; தொழிலாளர் நல துணை ஆய்வாளருடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள்! ஆனால் தீர்வில்லை. அதனால் கடந்த 06.05.2019 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு உப்பளம் மற்றும் கடல்சார் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் செய்துவரும் தொழிலாளர்களை வேலைக்கு அழைப்பது என்ற பெயரில் அவர்களது வீட்டிற்கே சென்று நிறுவனத்தின் அடியாட்கள் (ரவிக்குமார், ரவி, காளிமுத்து,பொன்னரசன்) தாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதில் தோட்டச்சேரி தாங்கலைச் சேர்ந்த சதாசிவம் என்ற தொழிலாளி மண்டை உடைந்து மருத்துவமனையில் உள்ளார்.

ஒட்டுமொத்தமாக தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு வராததால் வெளியாட்களை பணம் கொடுத்துக் கூட்டிவந்து,அவர்கள் மூலம், இந்த வேலைநிறுத்தத்தை சாதிக் கலவரமாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறது நிர்வாகம்.

தமிழ்நாடு உப்பளம் மற்றும் கடல்சார் தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் உமாநாத்தும் கொலைமிரட்டலுக்குள்ளாகியிருக்கிறார்.

இயற்கை அறம் மற்றும் தொழிலாளர் நலச் சட்டம் என எதையும் மதிக்காமல் ‘TEAMபத்மா கெமிக்கல்ஸ்’ நிறுவனம் நடத்திவரும் கார்ப்போரேட் காட்டாட்சியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தொழிலாளர்களுக்கு அவர்கள் கோரும் கூலியை வழங்குவதோடு, கடந்த ஆண்டுகளுக்கும் கணக்கிட்டால் வரும் கூலி நிலுவைத் தொகையையும் சேர்த்து உடனடியாக வழங்க வேண்டும்; எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

தமிழக அரசு இதில் தலையிட்டு, ‘TEAM பத்மா கெமிக்கல்ஸ்’நிர்வாகத்தை வழிக்குக் கொண்டுவர வேண்டும்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.. 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.