ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையைச் சேர்ந்தவர் ரஷிகேஷி. இவர் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு பெற கார்ணாம்பட்டியில் உள்ள துணை மின் நிலையத்தில் பணம் செலுத்தி விண்ணப்பித்தார்.
இதுகுறித்து ஆய்வு செய்த துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், அதற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக தருமாறு ரஷிகேஷிடம் கேட்டுள்ளார். கடைசியாக ரூ. 7 ஆயிரம் என பேசி முடிக்கப்பட்டது.
பின்னர், இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை அலுவலர்களிடம் ரஷிகேஷி புகார் தெரிவித்துள்ளார். உடனே அலுவலர்கள் அவரிடம் ரசாயனம் தடவிய ரூ. 7 ஆயிரம் பணத்தை துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.
அதன்படி ரஷிகேஷி அலுவலரிடம் பணம் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ. 7 ஆயிரம் லஞ்சப் பணத்தை மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: உடுமலைப்பேட்டை மருத்துவமனையில் உடற்கூராய்விற்கு லஞ்சம் பெற்ற ஊழியர்