ETV Bharat / state

விக்கிரவாண்டி அருகே ரூ.17.80 லட்சம் பணம் பறிமுதல்!

author img

By

Published : Oct 11, 2019, 7:41 PM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே தேர்தல் கண்காணிப்புக்குழுவினர் நடத்திய வாகன சோதனையில் கோவிந்தராஜன் என்பவரின் காரிலிருந்து  ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

விக்கிரவாண்டி அருகே ரூ. 17.80 லட்சம் பணம் பறிமுதல்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வாக்காளர்களிடம் பணம், பரிசுப் பொருட்கள் பரிமாறப்படுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் 33 பறக்கும் படையினரும் 33 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை விக்கிரவாண்டி அருகே உள்ள கோழிபண்ணைப் பகுதி பேருந்து நிறுத்தத்தில் தேர்தல் கண்காணிப்புக்குழு அலுவலர் திருநாவுக்கரசு தலைமையிலான அலுவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது செஞ்சியில் இருந்து விழுப்புரம் வழியாக திருச்சி நோக்கி வந்த கோவிந்தராஜன் என்பவரின் காரினை சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக கோவிந்தராஜனிடம் நடத்திய விசாரணையில், தனது மகள் மஞ்சள் நீராட்டு விழாற்கு நகை வாங்கச் சென்றதாகவும், ஆரணியில் உள்ள உறவினர்கள் வீட்டில் பத்திரிகை வைத்துவிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து உரிய ஆவணங்களைக் கொடுத்து விட்டு பணத்தைப் பெற்றுக்கொள்ளும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படியுங்க:

எங்களின் குறைகளைக் கேட்கக்கூட நேரம் இல்லையா? - புலம்பும் விக்கிரவாண்டிவாசிகள்

Intro:விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ 17.80 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.Body:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 13 பேர் களத்தில் உள்ளனர்.

இதையடுத்து இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாவட்டம் முழுவதும் 33 பறக்கும் படை மற்றும் 33 நிலையான கண்காணிப்பு குழுக்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை விக்கிரவாண்டி அருகே உள்ள கோழிபண்ணை பகுதி பேருந்து நிறுத்தத்தில் தேர்தல் கண்காணிப்புக்குழு அலுவலர் திருநாவுக்கரசு தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது செஞ்சியில் இருந்து விழுப்புரம் வழியாக திருச்சி நோக்கி வந்த கோவிந்தராஜன் என்பவருக்கு சொந்தமான காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

இந்த சோதனையில் உரிய ஆவணங்களின்றி ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் பணம் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விக்ரவண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Conclusion:இதுதொடர்பாக கோவிந்தராஜன் இடம் நடத்திய விசாரணையில், தனது மகள் மஞ்சள் நீராட்டுவிழாற்கு நகை வாங்க சென்றதாகவும், ஆரணியில் உள்ள உறவினர்கள் வீட்டில் பத்திரிக்கை வைத்துவிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.