விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தொப்பை விஜி (எ) விஜி (36). பிரபல ரவுடியான இவர் நேற்று (டிசம்பர் 13) இரவு கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம் அருகே கொடூரமாக கொலைசெய்யப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (32) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதில், சிலம்பரசனின் மனைவி கலையரசியும், ரவுடி விஜியும் இரண்டு ஆண்டுகளாக திருமண பந்தத்தை தாண்டிய உறவில் இருந்துவந்துள்ளனர். அதன் முன்விரோதம் காரணமாக, இருவருக்கும் இடையே நேற்றிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் விஜி தான் வைத்திருந்து கத்தியால், சிலம்பரசனை கொலைசெய்ய முயற்சித்துள்ளார்.
ஆனால், சிலம்பரசன் கத்தியைப் பிடிங்கி, விஜியை கொடூரமாக கொலைசெய்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் விஜியும், சிலம்பரசனும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரவுடி கொலை: 24 மணி நேரத்திற்குள் ஐந்து பேர் கைது