விழுப்புரம் மாவட்டத்தில் 3ம் நம்பர் லாட்டரி சீட்டு வாங்கி அருண் என்பவர் கடன் பெற்றிருந்தார். கடன் சுமை காரணமாக சென்ற ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி அருணும், அவரது மனைவி சிவகாமியும் தங்களது மூன்று குழந்தைகளுடன் விஷம் அருந்தி உயிரிழந்தனர்.
இறப்பதற்கு முன்னதாக குழந்தைகளோடு அருண் விஷம் அருந்திவிட்டு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் 3ம் நம்பர் லாட்டரி சீட்டுகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டன.
தற்போது மீண்டும் லாட்டரி சீட்டு தலைதூக்க ஆரம்பித்திருக்கும் சூழலில் அருண் உயிரிழந்த தினமான இன்று (டிச.12) கைவினைஞர்கள் முன்னேற்ற கட்சியின் சார்பில் உயிரிழந்தோருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் 3ம் நம்பர் ஆன்லைன் லாட்டரியை ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. விழுப்புரம் மந்தகரை பகுதியில் இந்நிகழ்வு நடைப்பெற்றது.
இதையும் படிங்க... ’ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கேட்க திமுகவிற்கு தகுதியில்லை’