விழுப்புரம்: அரகண்டநல்லூர் மற்றும் அதை ஒட்டி உள்ள பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்து கொடி கட்டி பறக்கும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் சரகத்திற்குட்பட்ட கடைவீதி மார்க்கெட் கமிட்டி, மணம்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் இருசக்கர வாகனத்தில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அரகண்டநல்லூர் நகரில் லாட்டரி சீட்டுகள் விற்பனை கொடி கட்டி பறக்கிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், ஒழுங்குமுறை விற்பனை கூடம், பேருந்து நிலையம் அருகில் உள்ள கடை மறைமுகமான பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்துக் கொண்டு கூலித் தொழிலாளிகளை குறி வைத்து இந்த லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக தெரியவருகிறது. அன்றாடம் வாழ்வாதாரத்திற்காக உடலுழைப்பை மட்டுமே நம்பியுள்ள கூலித் தொழிலாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரவைத்து தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை கொடி கட்டி பறந்து வருகிறது.
கேரள மாநில லாட்டரி சீட்டுகளின் எண்கள் பொறுத்து ரூ.250, ரூ.200, ரூ.100 சீட்டிற்கு ஏற்றவாறு ஒரு அட்டையில் எழுதி கொடுக்கப்படுகிறது. ஆன்லைனில் முடிவுகள் வந்தப் பின்பு, அந்த எண்ணிற்கோ? அதில் கடைசியாக உள்ள 3 எண்களோ? வந்திருந்தால் அந்த எண்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. இவ்வாறு, அரகண்டநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் தினமும் ஆயிரக்கணக்கான கூலித்தொழிலாளிகள், பொதுமக்கள் இந்த லாட்டரி சீட்டை மறைமுகமாக வாங்குகிறார்கள்.
இதன் மூலம் நாள்தோறும் அரகண்டநல்லூரில் நகரில் லட்சக்கணக்கான தொகையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகின்றன. இதனால், பல குடும்பங்கள் சீரழிகின்றன. அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று கிடைக்கும் சம்பள பணத்தில் லாட்டரி சீட்டுக்கள் வாங்குவதை மோகமாக கொண்டு பலரும் செயல்படுகிறார்கள். இந்த விற்பனையை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருமணம் தாண்டிய உறவு விவகாரம்.. ஸ்டுடியோவை துவம்சம் செய்த பெண்ணின் தந்தை கைது!