விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி ஜெயஶ்ரீ. இவரை அந்த கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் முருகன், கலியபெருமாள் ஆகியோர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இவர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தமிழ்நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் சிறையில் இருக்கும் கலியபெருமாள், முருகன் ஆகிய இருவரின் உறவினர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது சிறையில் இருக்கும் கலியபெருமாளின் மகள் கூறியதாவது,
"சிறுமதுரை சிறுமி கொலை வழக்கில் கலியபெருமாள், முருகன் ஆகிய இருவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும். அதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
சிலிண்டர் வெடித்ததாக வந்த தகவலின் அடிப்படையில் தான் எங்கள் பெற்றோர் அங்கு சென்றனர். திட்டமிட்டு இந்த சம்பவத்தை நடத்தியுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'மாணவியை எரித்துக் கொன்றவர்கள் மீது ஈவு, இரக்கம் காட்டக்கூடாது' - பொன்.ராதாகிருஷ்ணன்