விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அகதிகள் முகாமில் 1,440 பேர் வசித்து வருகின்றனர். கடந்த மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் இவர்களுக்கு இதுவரை இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை, ஆதார் அட்டை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே தங்களுக்கு உடனடியாக இந்திய குடியுரிமை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "இந்தியா முழுவதும் வெவ்வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுவருகிறது. அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வசித்து வருபவர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முகாம்களில் உள்ள சிலர் மீண்டும் இலங்கை செல்வதற்கு ஆயத்தமாக உள்ளனர். அவர்களை பத்திரமாக இலங்கை திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தனர்.