விழுப்புரம்: வங்கக் கடலில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்திற்கும் கன மழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 4 நாட்களுக்கு முன்பு விடுத்தது.
இந்நிலையில் இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் கூறுகையில், “புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது.
மாவட்டத்தில் 40 கிலோ மீட்டர் கடற்கரை சாலைகளிலும், 19 மீனவ கிராமங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 1091 தற்காலிக நிவாரண மையங்கள், 12 புயல் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 40 பேர் கொண்ட பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். எனவே, புயலை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: மாண்டஸ் புயலால் என்ன நடக்கும்? - வானிலை ஆய்வு மையத்தின் முழு தகவல்!