TNCSC-க்கு இணையான ஊதியம், தனித்துறை, ஓய்வூதியம், பணி வரன்முறை மற்றும் பொட்டல் முறை ஆகியவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரன் ராஜா கூறியதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அட்டைகளுக்கான அரிசி ஒதுக்கீடு குறைந்த அளவில் உள்ளது. இதனால் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் அரிசி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை.
TNCSC கிடங்குகளில் நியாய விலை கடைகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை, மறு எடை செய்து சரியான எடையில் எங்களுக்கு வழங்கிட வேண்டும். நியாய விலை கடைகளுக்கு நகர்வு செய்யப்படும் லாரிகளில் அரசால் வழங்கப்பட்ட எடை தட்டுகள் இருந்தும் அதை பயன்படுத்துவதே இல்லை. இதனை முறைபடுத்த வேண்டும் என்றார்.