புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அரும்பார்த்தபுரம் ரயில்வே கேட் மேம்பால பணிகள் நடப்பதால், வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த பகுதியில் நேற்று மாலை ரயில் கடந்து செல்வதற்காக கேட் கீப்பர் சகாயராஜ் கேட்டை மூடினார். அப்போது குடிபோதையில் பைக்கில் வந்த இரு வாலிபர்கள் கேட்டை திறக்கக்கோரி தகராறில் ஈடுபட்டனர். அப்போது கேட் கீப்பாரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைக் கண்ட பொதுமக்கள், போதை இளைஞர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து தர்ம அடிகொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.