ETV Bharat / state

உளுந்தூர்பேட்டை புத்தனந்தல் அணையை ஆய்வு செய்த ஆட்சியர்!

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே சீரமைக்கப்பட்டு வரும் புத்தனந்தல் அணையை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

puthananthal dam inspected by villupuram collector
author img

By

Published : Oct 6, 2019, 8:28 AM IST

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த புத்தனந்தல் கிராமத்தையொட்டி உள்ள கெடிலம் ஆற்றில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு நீர் பாசனத்திற்காக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது புத்தனந்தல் அணை.

இந்த அணை கட்டி 50 ஆண்டுகள் கடந்ததால், தடுப்பணை முற்றிலும் பழுதடைந்து, அதில் இருந்த செட்டர்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதால் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. பழுதடைந்த நிலையில் இருந்த அணைக்கட்டை சீரமைக்கக் கோரி, விவசாயிகளுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து போராடி வந்த நிலையில், புத்தனந்தல் அணையிலிருந்து விவசாய நிலங்களுக்குத் செல்லுகின்ற 16 கிலோமீட்டர் வாய்க்கால்களையும் சீரமைக்க ரூ. 60 லட்சம் நிதியை கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு ஒதுக்கியது.

தற்போது கட்டுமானப் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பருவமழை காலம் என்பதால் கட்டுமான வேலைகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர், வேல்முருகன் பொதுப்பணித்துறை அலுவலர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் மோகன் உட்பட விவசாயிகளும் உடனிருந்தனர்.

புத்தனந்தல் அணையை ஆட்சியர் ஆய்வு செய்தார்

மேலும் படிக்க: உள்ளாட்சித் தேர்தல்: விறுவிறுப்படையும் விழுப்புரம்

மேலும் பார்க்க: நாமக்கல்லில் லாரி கூண்டு கட்டும் தொழில் அழியும் அபாயம்

Intro:tn_vpm_02_ulunthurpettai_collector_visit_vis_tn10026Body:tn_vpm_02_ulunthurpettai_collector_visit_vis_tn10026Conclusion:உளுந்தூர்பேட்டை அருகே முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புத்தநந்தல் அணையை விவசாயிகளின் கோரிக்கை ஏற்று சீரமைக்கப்பட்டு வருவதால் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு !!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள புத்தநந்தல் கிராமத்தை ஒட்டி ஓடக்கூடிய கெடிலம் ஆற்றில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு நீர் பாசனத்திற்காக முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது புத்தாணந்தல் அணை.இந்த அணை கட்டி ஐம்பதாண்டுகளுக்கு மேல் ஆனதால் தடுப்பணை முற்றிலும் பழுதடைந்து அதில் இருந்த செட்டர்களை மர்மநபர்கள் திருடிச் சென்றதால் பராமரிப்பு இல்லாமல் இருந்தது, பாழுதடைந்த நிலையில் இருந்த அணைக்கட்டை சீரமைக்க கோரி விவசாயிகளுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து போராடி வந்த நிலையில் சென்ற ஆண்டு தமிழக அரசால் புத்தானந்தல் அணையையும் அணையிலிருந்து விவசாயிநிலங்களுக்குத் செல்லுகின்ற 16 கிலோமீட்டர் வாய்க்கால்களையும் சீரமைக்க ரூ. 60 லட்சம் நிதி ஒதிக்கியது. தற்போது கட்டுமானப் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு பருவமழை காலம் என்பதால் கட்டுமான வேலைகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர், வேல்முருகன் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் மோகன் உட்பட விவசாயிகளும் உடனிருந்தனர்...
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.