ETV Bharat / state

அரசுப் பேருந்தில் மது பாட்டில்கள் கடத்திய 3 பெண்கள் கைது!

விழுப்புரம்: புதுச்சேரி மது பாட்டில்களை அரசுப் பேருந்தில் கடத்திய மூன்று பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மது பாட்டில்கள் கடத்தல்
author img

By

Published : Aug 21, 2019, 6:52 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில், புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வழியாக மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த வகையில் புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் பேருந்துகளில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த TN 32 N 2166 பதிவு எண் கொண்ட அரசுப் பேருந்தை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தபோது, அதில் ஆறு கட்டை பைகளில் எந்த அனுமதியோ அல்லது உரிமமும் இன்றி 695 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

மது பாட்டில்கள் கடத்திய 3 பெண்கள் கைது
மது பாட்டில்கள் கடத்திய 3 பெண்கள் கைது

இதனையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த சங்கீதா, தேவகி, ரேவதி ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Intro:விழுப்புரம்: அரசு பேருந்தில் புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்திய 3 பெண்களை விழுப்புரம் நகர காவல்நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர்.Body:புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வழியாக மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் இன்று புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த
TN 32 N 2166 பதிவு எண் கொண்ட அரசு பேருந்தை, விழுப்புரம் காந்தி சிலை அருகே விழுப்புரம் நகர காவல்நிலைய போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அதில் 6 கட்டை பைகளில் எவ்வித அனுமதியோ அல்லது உரிமமும் இன்றி புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 695 கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து இதனை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலையை சேர்ந்த சங்கீதா, தேவகி மற்றும் சித்தாமூர் பகுதியை சேர்ந்த ரேவதி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Conclusion:மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.