விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த இடையான்சாவடி கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் உயர்மின்னழுத்த நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கடந்த சில நாள்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து இடையான்சாவடி கிராமத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சக்கரபாணி தலைமையில் பொதுமக்களிடையே கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தங்களுக்கு உயர்மின் அழுத்த நிலையம் வேண்டாம் என பொதுமக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
உயர்மின்னழுத்த கோபுரங்களால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்புடையும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், பல குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதால் இத்திட்டம் வேண்டாம் எனக் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினர் சக்கரபாணி, காவல் துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம், மின்துறை அலுவலர்கள் அந்த இடத்தினை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையும் படிங்க:உயர்மின் கோபுரத்திற்கு எதிர்ப்பு: வட்டாட்சியர் சிறைப்பிடிப்பு!