ETV Bharat / state

"7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்" - சி.வி.சண்முகம் நம்பிக்கை!

விழுப்புரம்: எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்ப்பதாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்
author img

By

Published : Nov 6, 2020, 3:15 PM IST

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (நவ.06) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ., "தமிழ்நாட்டில் தேவையான அளவு உரம், விதைகள் கையிருப்பு உள்ளது. விவசாயிகளுக்கு 5,398 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்துப் பொருள்களும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் இணைப்பு பொருள்களை வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்தும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம்., "எழுவர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம். பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசின் கரோனா விதிமுறைகளுக்கு உள்பட்டே பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளது.

ஜிஎஸ்டி வரியை நாட்டில் அறிமுகப்படுத்தியதே காங்கிரஸ்-திமுக தலைமையிலான கூட்டணிதான். அதிமுக செய்த சாதனைகளை எல்லாம் திமுகவின் போராட்டத்தால் கிடைத்ததாக மு.க.ஸ்டாலின் மேற்கோள் காண்பித்துக்கொள்கிறார். நீட் தேர்வை எப்படி ரத்து செய்வது என மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினால் அதனை செயல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.