தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று நிலையில், அதில் பதிவான வாக்குகள் இன்று (மே.2) காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னிலை, பின்னடைவு நிலவரங்கள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அதன்படி திருக்கோவிலூர் தொகுதியில் 15ஆவது சுற்று முடிவில் திமுக வேட்பாளரும், முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி 35,552 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கலிவரதனை பின்னுக்குத் தள்ளி முன்னிலையில் உள்ளார்.