விழுப்புரம் மாவட்டம், வீரபாண்டி பகுதியில் சாராய ஊறல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளர் ரேணுகாதேவிக்கு ரகசியத் தகவல் கிடைத்து.
அதனடிப்படையில் இன்று(ஆகஸ்ட் 17) மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீரபாண்டி அருகேயுள்ள ஆதிச்சனூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள ஒரு புதரில் 500 லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அதனை சோதனை செய்த காவல் துறையினர், அதில் 500 லிட்டர் எரிசாராயம் இருந்ததைக் கண்டறிந்தனர். இதையடுத்து அவற்றை உடனடியாக தரையில் கொட்டி அழித்தனர்.
மேலும், இந்த ஊறல் அமைத்த திருவண்ணாமலை மாவட்டம், அண்டம்பாலாம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரைத் தேடிவருகின்றனர்.
காவல் துறையினர், கைப்பற்றப்பட்ட சாராய ஊறலின் மதிப்பு 25 ஆயிரம் ரூபாய் இருக்கும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.