விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பெருமாள் கோயில் தெருவில் வசித்து வரும் வேலாயுதம் மகன் பிரதாப். இவர் கச்சிராயபாளையம் அருகே உள்ள அரசினர் உண்டு உறைவிடப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
நேற்று கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. அதில் இறுதி போட்டி முடிந்து பரிசுகள் வழங்கும் விழா நடைபெற இருந்தது. இதற்கிடையில் பள்ளியின் ஒரு வகுப்பறையின் அருகே உள்ள படிகட்டில் பிரதாப் மதுபோதையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். அந்த சம்பவம் பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, நிகழ்விடதிற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். அதன் பின் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பவம் நடந்த நாளில் அவர் பள்ளியில் குடி போதையில் சுற்றி திரிந்ததாக தெரியவந்தது. பிரதாப் இறப்பில் அனைவர் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியதால், வழக்கு பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: காந்தி ஜெயந்தியன்று மது விற்ற 4 பேர் கைது, 64 பாட்டில்கள் பறிமுதல்!