விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (26). இவர் செஞ்சி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவந்தார்.
சரவணன் நேற்றிரவு பணி முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்வதாகக் காவல் நிலையத்தில் உள்ள சக காவலர்களிடம் கூறிவிட்டுக் கிளம்பியுள்ளார்.
ஆனால் வீட்டிற்குச் செல்லாமல், இவர் தனது விவசாய நிலத்தில் இருந்த மரத்தில் திடீரென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதைக்கண்டு அதிர்சியடைந்த பொதுமக்கள், அருகிலிருந்த அனந்தபுரம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையில் சரவணனின் தற்கொலை குறித்து தகவலறிந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதையும் படிங்க: மதுபோதையில் தகராறு - பிரபல ரவுடி வெட்டிக்கொலை