விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டடத்தில் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக, தனியார் பள்ளியின் முதல்வர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைடுத்து விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் மீது இன்று (ஜன.15) போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகிய அப்பள்ளி முதல்வரை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.
அப்பள்ளியின் முதல்வராகவும், குறிப்பிட்ட பாடம் ஒன்றின் ஆசிரியராகவும் உள்ள இவர், அடிக்கடி பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, யாரிடமாவது வெளியில் கூறினால் பாஸ் ஆகவிடாமல் செய்து விடுவேன் என அவர் மிரட்டியதாகவும் தெரியவருகிறது.
இதனால், செய்தவறியாது இருந்த பள்ளி மாணவர்கள் சிலர் இது குறித்து தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக, அனைத்து மகளிர் நிலையத்தில் பள்ளி முதல்வர் மீது புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில், பள்ளி முதல்வர் கார்த்திகேயன் மீது பெண் குழந்தைகளை அடைத்து வைத்தல், தேவையில்லாமல் தொடுதல் என்பன உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் போக்சோ வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: இண்டிகோ விமானி மீது தாக்குதல்! என்ன காரணம்? வீடியோ வைரல்!
மேலும், போலீசார் தலைமறைவாக உள்ள கார்த்திகேயனை வலைவீசித் தேடி வருகின்றனர். பள்ளியின் முதல்வர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததும், இதற்காக அவர் மீது போக்சோ வழக்கு பதிந்த நிலையில் அவர் தலைமறைவான சம்பவமும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை வாபஸ் பெற பள்ளி நிர்வாகம் தரப்பில் புகாரளித்த பெற்றோருக்கு அழுத்தம் தரப்படுவதாகவும் கூறப்படுகிது. இதனையடுத்து விரைவில் அப்பள்ளி முதல்வரை கைது செய்ய வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அமைச்சர் காரை சுத்து போட்ட அவனியாபுரம் காளை உரிமையாளர்கள்.. மதுரையில் நடந்தது என்ன?