ETV Bharat / state

வேளாண் சார்ந்த சுய தொழிலில் கவனம் செலுத்துங்கள் - அன்புமணி ராமதாஸ் அறிவுரை!

சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் சாராயம் விற்பவர்கள்தான் கல்வியாளர்களாக உள்ளார்கள் என அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

சாராயம் விற்பவர்கள்தான் கல்வியாளர்கள் - அன்புமணி ராமதாஸ்

author img

By

Published : Feb 13, 2023, 11:41 AM IST

தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரில் 10வது பட்டமளிப்பு விழா நேற்று (பிப்.12) கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், கல்வி அறக்கட்டளை அறங்காவலர் குழு தலைவர் ஜி.கே.மணி மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

2017 முதல் 2020ஆம் கல்வியாண்டில் பயின்ற 12 முதுகலை பட்டதாரிகள் மற்றும் 389 இளங்கலை பட்டதாரிகள் என மொத்தம் 401 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், "இன்று பட்டம் பெற்றிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களை பெற்றோர்கள் கஷ்டப்பட்டு படிக்க வைத்து, இதுவரை உங்களை பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் படிக்கவில்லை என்றாலும், உங்களை படிக்க வைத்து அழகு பார்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் கடைசி காலம் வரை நன்றியுடன் இருக்க வேண்டும்.

இங்கு அமர்ந்திருக்கும் ராமதாஸ், ஒரு தீர்க்கதரிசி. 30 ஆண்டுகளுக்குப் பின் என்ன நடக்கும் என்று கூறுபவர். அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு பழமொழி. உங்களுக்கு ஒரு ஆண்டு தொலைநோக்கு சிந்தனை இருந்தால் அதற்கு நெல் பயிரிடலாம், பத்தாண்டு தொலைநோக்கு சிந்தனை இருந்தால் மரங்கள் நட வேண்டும், ஆனால் நூறாண்டு தொலைநோக்கு சிந்தனை இருந்தால் அனைவருக்கும் கல்வி அறிவு வழங்க வேண்டும். அதுதான் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும்.

எனவேதான் அவரின் சிறிய முயற்சியினால் இந்த கல்லூரி கட்டப்பட்டது. இதை நாங்கள் அறக்கட்டளை என்று சொல்ல மாட்டோம். கல்வி கோயில் என்றுதான் கூறுவோம். இங்கு கல்வி கற்க அனைவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இங்கிருக்கும் ஒவ்வொரு செங்கலில்கூட ராமதாஸ் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் உழைப்பு உள்ளது.

இந்தக் கல்லூரியை, நினைத்திருந்தால் எங்கு வேண்டும் என்றாலும் கட்டியிருக்கலாம். சென்னை போன்ற நகரப் பகுதிகளில் கட்டியிருக்கலாம். ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் இங்கு கட்டுவதற்கான காரணம், விழுப்புரம் மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்பதாலும், கிராமப்புற மானவர்கள் கல்வி பயின்று கல்வி அறிவு பெற்று வாழ்வில் வளம் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும் இப்பகுதியில் கட்டப்பட்டது.

சேவை மனப்பான்மையோடு கட்டப்பட்டது. கல்வி என்பது ஒரு சேவை. ஆனால் இந்த கால கட்டத்தில் கல்வியை வியாபாரம் ஆக்கிவிட்டார்கள். கல்வியை யார் யார் வழங்குகிறார்கள் என்று பார்த்தீர்களா? சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையில் கூட சாராயம் விற்பவர்கள்தான் கல்வியாளர்களாக உள்ளார்கள். கல்லூரியில் கல்வி பயிற்றுவிப்பது ஒரு பகுதிதான்.

ஆனால் அதன் பிறகு நீங்கள் பல்வேறு கல்விகளை பயில வேண்டும். தற்போது உலகத்தில் நவீன மயமாக்குதல், கணினி மயமாகுதல், பண மதிப்பிழப்பு போன்றவற்றால் உலகம் மாறிக் கொண்டு வருகிறது. எனவே அனைவரும் எந்த பட்டப்படிப்பு படித்தாலும் கம்பியூட்டர் பற்றிய அறிவை பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் மேற்கொண்ட கோரிக்கை இதுதான். காரணம், ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை தேடிச் செல்கின்றனர். அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்காதீர்கள். உங்களுக்கு முன்னால் வேலைவாய்ப்பில் பதிவு செய்தவர்கள் பல லட்சம் பேர் உள்ளனர்.

எனவே வேளாண் சார்ந்த வேலைகள், சுய வேலைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள். படித்து பட்டம் பெறும் இந்த நிகழ்வு, ஒரு மகிழ்ச்சியான தருணம். நான் இந்த நிலையை கடந்து வந்துள்ளேன். நான் பட்டம் வாங்கும்போது சந்தோஷப்பட்டதை விட, அதிகம் கவலைப்பட்டுள்ளேன். காரணம், எனது நண்பர்களை பிரியப் போகிறேன் என்ற கவலை. அப்போதெல்லாம் தொலைபேசி எதுவும் இல்லை. எனவே உங்களின் நண்பர்கள் உங்களுக்கு கிடைத்த பொக்கிஷம். எனவே அவர்களிடம் பேசுங்கள். அவர்களை அடிக்கடி சந்தியுங்கள். அவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் வீரமுத்து, தாளாளர் ஸ்ரீகாந்தி பரசுராமன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், ராமதாஸ் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அலுவலர்கள் பொறியியல் கல்லூரி முதல்வர், சட்ட கல்லூரி முதல்வர், பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர்கள், துணைத் தலைவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: "அண்ணா பல்கலை.,யில் அவுட்சோர்சிங் முறையில் ஊழியர்களை நியமிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.