விழுப்புரம் அருகேயுள்ள கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஓட்டலில் தங்கி பணிபுரிந்துவந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு, புஷ்பராஜ் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அவரின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கு காலம் தாமதமாகியுள்ளது.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த புஷ்பராஜ் குடும்பத்தினர், உறவினர்கள், அவரின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
இதையும் படிங்க: திருப்பத்தூர் துணைமின் நிலைய பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு!