விழுப்புரம்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு விழுப்புரம் மகாராஜபுரத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முக உடையார் என்பவர், ஆறு ஏக்கர் 75 செண்ட் நிலத்தினை 1991ஆம் ஆண்டு வழங்கியுள்ளார்.
அந்த இடத்திற்கு வீட்டு வசதி வாரியம் குறைவான இழப்பீட்டுத் தொகையை வழங்கியதாக அவரது மகன் சிவானந்தம் என்பவர் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் சிவானந்தத்திற்கு தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியம் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதிக்குள் 39 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென நீதிபதி மோனிகா உத்தரவிட்டப்பட்டிருந்தார்.
ஆனால் சிவானந்தத்திற்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாத நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அசையும் சொத்துகளை பறிமுதல் செய்ய விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று (ஏப்.07) சிவானந்தம் நீதிமன்ற அலுவலர்களுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அசையும் சொத்துகளை பறிமுதல் செய்ய வந்தார்.
அவரிடம் மாவட்ட நிர்வாகத்தினர் ஆறு மாதகாலம் கால அவகாசம் கேட்டதன் அடிப்படையில் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்யாமல் திரும்பி சென்றனர்.