ETV Bharat / state

இருபக்க தாக்குதலுக்கு ஆளாகும் தமிழ்நாட்டு மக்கள்! ஜி. ஆர். வருத்தம்

விழுப்புரம்: தமிழ்நாட்டு மக்கள் மத்திய - மாநில அரசுகளின் இருபக்க தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக ஜி. ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

author img

By

Published : Oct 6, 2019, 9:40 AM IST

ஜி.ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சிபிஎம் பரப்புரை செய்கிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் கெடார், காணை ஆகிய பகுதிகளில் தெருமுனை பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவுள்ளேன். நாளை (அக்டோபர் 7, 2019) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார். தமிழ்நாட்டு மக்கள் மத்திய - மாநில அரசுகளின் இருபக்க தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்”. மேலும், மத்திய அரசு இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்தும் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. அதனால் மத்திய அரசு எதிர்ப்பு மாநில அரசிடம் இல்லை. ஒரே மொழி கொள்கை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத்கீதை என எதையும் எதிர்க்காமல் மத்திய அரசின் எடுபிடியாகவே மாநில அரசு செயல்படுகிறது.

இத்தொகுதியில் உள்ள முண்டியம்பாக்கம், ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு, 56 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ரூபாய் 27 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது” என்று கூறினார்.

மேலும், ஜெர்மனியில் உள்ளது போல், தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை, தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், சில அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் ஒத்துக்கொள்ளவில்லை என்றார்.

நாடாளுமன்றத் தேர்தலில் செலவு செய்த ரூ.10 கோடிக்கான கணக்கை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளோம். அதனை இணையத்தில் விரைவில் வெளியிடவுள்ளனர். இதில் ரகசியம் காப்பதற்கு ஒன்றும் இல்லை என்றார்.

Intro:விழுப்புரம்: தமிழக மக்கள் மத்திய-மாநில அரசுகளின் இருபக்க தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக ஜி. ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.Body:இதுதொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர்.,

"தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சிபிஎம் பிரசாரம் செய்கிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் கெடார், காணை ஆகிய பகுதிகளில் தெருமுனை பிராசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவுள்ளேன். வரும் 11 தேதி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுகூட்டத்தில் பேசவுள்ளார்.

தமிழக மக்கள் மத்திய-மாநில அரசுகளின் இருபக்க தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

மத்திய அரசு இரண்டாம் முறை ஆட்சி வந்தும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. அதனால் மத்திய அரசு எதிர்ப்பு மாநில அரசிடம் இல்லை.

ஒரே மொழி கொள்கை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத்கீதை என எதையும் எதிர்க்காமல் மத்திய அரசின் எடுபிடியாகவே மாநில அரசு செயல்படுகிறது.

இரு தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்து அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

இத்தொகுதியில் உள்ள முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ சக்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு 56 கோடி ரூபாய் பாக்கி வைத்து உள்ளது. இதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ரூபாய் 27 ஆயிரம் கோடி செலவு செய்து உள்ளது.

ஜெர்மனியில் உள்ளது போல், தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்கிறது.

ஆனால், சில அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையமும் ஒத்துக்கொள்ளவில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் செலவு செய்த ரூ.10 கோடி தேர்தல் ஆணையத்திடம் கணக்கு கொடுத்து உள்ளோம். அதனை இணையத்தில் வெளியிடவுள்ளனர். இதில் ரகசியம் ஒன்றும் இல்லை" என சிபிஎம் அரசியல் தலைமை குழு ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Conclusion:இந்த சந்திப்பின் போது முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் என்.சுப்பரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துகுமரன், எஸ்.கீதா, ஜி.ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.