விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேவுள்ள காட்டுச்சிவிரி கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடை அமைக்க அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதனால், அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாகவும், ஆபத்தாகவும் இருக்கும் என கருதி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று (டிச.28) விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
மேலும், டாஸ்மாக் கடை அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மீறி டாஸ்மாக் கடை அமைக்கும் பட்சத்தில் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: தலைக்கேறிய மது போதை: நண்பனை அடித்துக் கொன்றவர் கைது!