விழுப்புரம் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை விளக்கினார்.
அதில், 'வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தருபவர்களைத் தற்காலிகமாக தனிமைப்படுத்துவதற்காக விக்கிரவாண்டி வட்டம், கப்பியம்புளியூர் ஏஆர் பொறியியல் கல்லூரி, திருவெண்ணெய்நல்லூர் வட்டம், டிஆர்எஸ் பொறியியல் கல்லூரி, திண்டிவனம் வட்டம், மேல்பாக்கம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, செஞ்சி வட்டம் காரியமங்கலம் டேனி கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் தற்காலிகமாக தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் இதுவரை, 162 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல், முகக்கவசம் அணிந்து தனியாக இருக்க வேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீதிகளில், சுற்றித்திரிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் விழுப்புரம் மாவட்டத்துக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து இன்றைக்குள் (மே 3ஆம் தேதி வரை), வருகை தந்தவர்கள் உடனடியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தகவல் மற்றும் கட்டுப்பாட்டு அறை எண், 04146-223265 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: