விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள சிவனார்தாங்கல் அரசு நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்துவருபவர் செல்வம் (40). இவர் தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டி நெற்றியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவத்தை 20 நிமிடங்களில் வரைந்து அசத்தியுள்ளார்.
இது குறித்து ஆசிரியர் செல்வம் கூறுகையில்,
"2012இல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் பணி நியமனம் செய்யப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் 16 ஆயிரம் பேர் கடந்த எட்டு ஆண்டுகளாகப் பணிபுரிந்துவருகிறோம்.
எங்களுக்கு மாத ஊதியமாக ரூ.7,700 தருகிறார்கள். இந்தப் பணம் எங்கள் வாழ்வாதாரத்துக்குச் சிரமமாக உள்ளது. தமிழ்நாடு அரசுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் எங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: மின்சார வாகனங்களுக்கு 100% வரி விலக்கு - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு