விழுப்புரம்: சிட்டாம்பூண்டி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 140 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், அங்கு மாணவர்களுக்கு பாடம் நடத்த 5 ஆசிரியர்களே உள்ளனர்.
இதனால், இப்பள்ளியில் கணித ஆசிரியர் பணியிடங்கள் கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருந்த நிலையில் மற்ற ஆசிரியர்கள் கணிதப் படத்தை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கின்றனர். மேலும் தலைமை ஆசிரியர் 6 மாத காலமாக இல்லாத நிலையே தொடர்ந்து வருகிறது.
இதனால், அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி பாதிப்படைவதாக, பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை. எனவே, உடனடியாக காலியாக உள்ள இடங்களில் ஆசிரியர்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அப்பகுதியிலுள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள்பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, கேனலூர் அரசு பள்ளியிலிருந்து ஆசிரியர் ஒருவரை தற்காலிகமாக சிட்டாம் பூண்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு நியமித்துள்ளதாக இன்று (ஜூலை7) மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிறார் திரைப்பட விழா - கும்பகோணத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைப்பு