விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு அரசின் சின்னசேலம் தோட்டக்கலைத் துறை சார்பில் பாக்கம் கிராமத்தில் உள்ள 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை சின்னசேலம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சத்யராஜ் தொடங்கிவைத்தார். ஏரியின் கரையோரமாக 2000 பணைவிதைகள் நடப்பட்டது. இதில் அரசு அலுவலர்கள், விவசாயிகள், இளைஞர்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் பனை விதைகளை நட்டனர்.
பொதுமக்களிடம் பேசிய தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சத்யராஜ் பனை விதைகளை நடவு செய்தால் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது. மேலும் எதிர்கால சமுதாயத்திற்கு பயனுள்ளதாகவும், எளிதில் விளையும் தன்மை கொண்டதாகவும், வறட்சி தாங்கி வளரும் தன்மையுடனும் இருக்கும். மேலும் சின்னசேலம் வட்டாரத்தில் உள்ள ஏரிகளில் 7000 பனைவிதை நட போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சிவகாசியில் தயார்நிலையில் உள்ள தீபாவளி பட்டாசு பரிசுப் பெட்டிகள்!