விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவந்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆறு, பம்பை ஆறுகளில் அதிக நீர்வரத்துடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கின.
விழுப்புரம் அடுத்த கானை பெரும்பாக்கம், சூரப்பட்டு, காங்கியனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி சேதமாகி உள்ளன.