விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை பகுதியைச் சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், மும்பையில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
கடந்த 28ஆம் தேதி ரயில் மூலம் மும்பையில் இருந்து விழுப்புரம் திரும்பிய இவருக்கு, கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன் பின்னர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
இதைத்தொடர்ந்து இவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனையடுத்து சுகாதாரத் துறை அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி, அந்த இளைஞரின் உடலை அடக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்களுக்கு கரோனா!