விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்(38). இவர் கோட்டக்குப்பம் சறுக்கு பாலம் சந்திப்பில் இன்று காலை 05.00 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது புதுவை மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் ஒன்று, மின்னல் வேகத்தில் இவர் மீது திடீரென மோதியது.
இதில் இருவரும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். பின்னர், அப்பகுதியில் சென்றவர்கள் காயமடைந்த இருவரையும் உடனே மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுவை பிம்ஸ் மருத்துவமனைக்கு கோட்டக்குப்பம் போலீசார் உதவியுடன் அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சண்முகம் உள்ளிட்ட இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சண்முகம் சிகிச்சைப்பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், படுகாயமடைந்த மற்றொருவர் தீவிர சிகிச்சைப்பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இதனிடையே இந்த விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: நைஜீரிய செஸ் வீராங்கனையை உற்சாகத்துடன் வழி அனுப்பிய தமிழ்நாடு போலீசார்