விழுப்புரம்: வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மூன்று நாள்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மழை நீர் சாலைகளிலும், தெருக்களிலும் குளம் போல்தேங்கி உள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளை (நவ. 12) ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சேர்ந்து உழைப்போம் - முன்களப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் ட்வீட்