ETV Bharat / state

சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு கோடி மதிப்பிலான சிறப்பு கடனுதவித் திட்டம்!

விழுப்புரம் : சுய உதவிக் குழுக்களுக்கான சிறப்பு கடன் உதவித் திட்டத்தை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று தொடக்கி வைத்தார்.

சுயஉதவி குழுக்களுக்கு சிறப்பு கடனுதவித் திட்டம்

author img

By

Published : May 22, 2020, 7:21 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில், மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் மாவட்டத்தில் செயல்படும் 126 சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் அளவிலான கடன் உதவித் திட்டத்தை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "கரோனாவால் பல்வேறு தரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், மக்களின் கடன் தேவை, அவசரத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் குறைந்தது 5 ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.

தற்போது ஏழு விழுக்காடு வட்டியில் கடன் வழங்கப்படும் நிலையில், முதல் ஆறு மாதங்களுக்கு கடனை திருப்பி செலுத்த தேவையில்லை. ஆறு மாதங்கள் கழித்து சம தவணையில் கடன் தொகை வட்டியுடன் வசூலிக்கப்படும். இந்தத் திட்டம் செப்டம்பர் 30 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். தேவைப்படும் பட்சத்தில் இத்திட்டம் நீட்டிக்கப்படும்.

கடனை திருப்பி செலுத்தும் காலம் இரண்டு மற்றும் மூன்று வருடங்கள் ஆகும். சிறப்புச் சலுகையாக இந்தக் கடனுக்காக சுய உதவிக் குழுக்களிடம் இருந்து முன்வைப்பு தொகை, காப்புத் தொகை, சேவைக் கட்டணம், நடைமுறைக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

எனவே, தகுதியுள்ள சுய உதவிக் குழுக்கள் தங்கள் அருகாமையிலுள்ள மத்திய கூட்டுறவு வங்கி, நகரக் கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி கடன்களை பெற்றுக் கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, விழுப்புரம் மாவட்ட மண்டல இணை பதிவாளர் ஆ.பாலகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : புகைப்பட கலைஞர்களுக்கு நிவாரணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.