ETV Bharat / state

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளராக நா.புகழேந்தி நியமனம்! - விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளர்

விழுப்புரம்: மத்திய மாவட்ட திமுக செயலாளராக நா.புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

vpm
vpm
author img

By

Published : Sep 18, 2020, 12:36 PM IST

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளராக இருந்த க.பொன்முடி, அவைத் தலைவராக இருந்த நா. புகழேந்தி, மாவட்ட துணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயச்சந்திரன் ஆகியோர் அண்மையில் தங்களது பொறுப்பிலிருந்து விடுவித்துக்கொண்டனர்.

இதையடுத்து விழுப்புரம் மத்திய மாவட்ட அவைத் தலைவர், மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தப் பொறுப்புகளுக்கான மனுதாக்கல் கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று(செப்.18) விழுப்புரம் மத்திய மாவட்ட கழகச் செயலாளராக நா.புகழேந்தி, அவைத் தலைவராக ஜெயச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலாளராக டி.என்.முருகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நா.புகழேந்தி அண்மையில் நடைபெற்ற விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.