ETV Bharat / state

தேசத்துரோக வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்: முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்பி கடிதம்! - முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிய எம்பி ரவிக்குமார்

விழுப்புரம்: அதிமுக ஆட்சியில் பதியப்பட்ட தேசத் துரோக வழக்குகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி, முதலமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

தேசத்துரோக வழக்கு
முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிய ரவிக்குமார்
author img

By

Published : Jun 4, 2021, 1:36 AM IST

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், அதிமுக ஆட்சியில் பதியப்பட்ட தேசத் துரோக வழக்குகளைத் திரும்பப்பெற வலியுறுத்தி இன்று (ஜூன் 03) கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “ கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த அதிமுக தலைமையிலான ஆட்சியின்போது பொதுமக்களின் கருத்துரிமை பெருமளவில் பறிக்கப்பட்டது. அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்தவர்கள், தமது அடிப்படை உரிமைகளுக்காகப் போராடியவர்கள் என ஏராளமானோர் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டார்கள்.

அதனால், அரசாங்கத்துக்கு எதிரான குற்றங்கள் ( Crimes against State) என்ற தலைப்பில் அதிகமான வழக்குகளைப் பதிவு செய்த மாநிலங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது. அந்தப் பிரிவின் கீழ் 2017ஆம் ஆண்டு 1802 வழக்குகள், 2018ஆம் ஆண்டு 2241 வழக்குகள், 2019ஆம் ஆண்டு 1311 வழக்குகள் தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

கடந்த 2010 -2020 ஆண்டுக்கு இடையிலான 10 ஆண்டுகளில் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 124 ஏ வை அதிக அளவில் பயன்படுத்திய மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. 2020ஆம் ஆண்டு வரை 139 வழக்குகள், 124 ஏ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவற்றில் கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளே அதிகம். அங்கு 21 வழக்குகள் பதியப்பட்டு அதில் 8 ஆயிரத்து 956 பொதுமக்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு பேர் தேசத் துரோக வழக்குகளை எதிர்கொள்ளவில்லை.

இன்று (ஜூன் 03) மூத்த ஊடகவியலாளர் வினோத் துவா என்பவர் மீது இமாச்சலப் பிரதேசத்தில் பதியப்பட்ட தேசத் துரோக வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்ததோடு, கேதார்நாத் சிங் எதிர் பீகார் மாநில அரசு (1962) என்ற வழக்கில் அளிக்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தான் தேசத் துரோக வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் பொதுமக்களுக்கு எதிராக அதிமுக அரசால் பதியப்பட்ட தேசத் துரோக வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்புக்கு முரணானவையாகும். எனவே, மனித உரிமைகள்மீது மதிப்பு கொண்ட தங்களது தலைமையிலான அரசு கடந்த 10 ஆண்டுகளில் 124 ஏ பிரிவின் கீழ் பதியப்பட்ட தேசத் துரோக வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறவேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.