விழுப்புரம் மாவட்டம் காந்தளவாடி ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள்வரை இளைஞர்களுக்காக நடைபெற்ற இந்த முகாமில் 44 தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்தன. வேலைவாய்ப்பு முகாமில் மொத்தம் 801 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
இம்முகாமில் 150 நபர்கள் தேர்வு செய்யப்பட்ட்டு பணி நியமன ஆனையை நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் வழங்கினார், முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ’உணவு பொருட்களை வாங்குவதில் நுகர்வோருக்கு கவனம் தேவை’